2 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன

268பார்த்தது
2 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாமக்கல் நகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் மாதா கோவில் அருகிலும், நாமக்கல் ஒன்றியம் வீசானம் ஊராட்சியிலும் ரூ. 13. 50 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத் தலைவர் பூபதி, தெற்கு நகர தி. மு. க. செயலாளர் ராணா ஆனந்த், ஒன்றிய செயலாளர் பழனிவேல், நகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணலட்சுமி, சரவணகுமார், சரோஜா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அருட்செல்வன், மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் ஆனந்த்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி