கட்டுமான நல வாரியங்களில் 11 லட்சம் தொழிலாளா்கள் சோ்ப்பு

59பார்த்தது
கட்டுமான நல வாரியங்களில் 11 லட்சம் தொழிலாளா்கள் சோ்ப்பு
நாமக்கல்: கடந்த மூன்று ஆண்டுகளில் 11 லட்சம் தொழிலாளா்கள் நல வாரியங்களில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒருங்கிணைந்த தொழிலாளா் நல அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜி. ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா் பங்கேற்று 25 பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம், ஓய்வூதியம் என்ற வகையில் ரூ. 4. 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி