ஆஞ்சநேயருக்கு 1, 008 லிட்டர் பால் அபிஷேகம்"

80பார்த்தது
நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் கோவில் எதிரே, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுவாமி வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 9: 00 மணிக்கு சுவாமிக்கு, 1, 008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, காலை, 10: 00 மணிக்கு, நல் லெண்ணெய், பஞ்சா மிர்தம், சீயக்காய், 1, 008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து, கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவடைந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்-காரம் செய்யப்பட்டு, தீபாராதணை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி