குமாரபாளையம், விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ஆக. , 27ல் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவர். பின், விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கறைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சிலைகள், சிறிய அளவு முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.