திருநங்கை மாணவிக்கு நிதியுதவி வழங்கிய பொதுநல அமைப்பினர்...

260பார்த்தது
திருநங்கை மாணவிக்கு நிதியுதவி வழங்கிய பொதுநல அமைப்பினர்...
பள்ளிபாளையம் திருநங்கை மாணவிக்கு குமாரபாளையம்  பொதுநல அமைப்பினர் நிதியுதவி வழங்கினர்.

 பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த  ராஜேஸ்வரியின்  மகள் திருநங்கை ஸ்ரேயா, பிளஸ் 2 தேர்வில்   337 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் ஒரே  திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். திருநங்கை மாணவி ஸ்ரேயாவிற்கு குமாரபாளையத்தை சேர்ந்த இனி ஒரு விதி செய்வோம் பொதுநல அமைப்பின் அமைப்பாளர் கவிதா, திருநங்கை மாணவி ஸ்ரேயாவிற்கு நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி