நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். வட்டமலை, காலனி மருத்துவமனை அருகே ஆகிய இடங்களில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகஅறிந்து, நேரில் சென்ற போலீசார் அங்கு மது விற்றுக்கொண்டிருந்த பெருமாள், 51, சசிகுமார், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.