நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது, பள்ளிபாளையம் பேருந்து நிலைய பகுதியில் செயல்படும் டீக்கடை ஒன்றில் சோதனை இட்ட பொழுது சுமார் 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா குட்காவை போலீசார் கைப்பற்றி காவேரி ஆர் எஸ் பகுதியை சேர்ந்த முருகன் வயது 28 என்பவரை கைது செய்தனர்.
மேலும் கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே ஒரு பெட்டிக்கடையில் சோதனை இட்ட பொழுது அங்கு முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 19 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது. இதனை அடுத்து கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.