குமாரபாளையம் தி. மு. க. சார்பில் மாவட்ட செயலர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி. மு. க. செயலர் மதுரா செந்தில் பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் தி. மு. க. சார்பில் பட்டாசுகள் வெடித்தும், கேக் கட் செய்தும் கொண்டாடப்பட்டது. நகர வடக்கு செயலர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர செயலர் ஞானசேகரன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று கேக் கட் செய்து, அனைவருக்கும் வழங்கினார். இவரது பிறந்த நாளையொட்டி பாசம் ஆதரவற்றோர் மையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.