பேச்சு,  கட்டுரை போட்டியில் சாதனை செய்த மாணவியர்

67பார்த்தது
பேச்சு,  கட்டுரை போட்டியில் சாதனை செய்த மாணவியர்
குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளி மாணவியர் மாவட்ட, வட்டார அளவிலான  பேச்சு, கட்டுரை போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

பள்ளிபாளையம் வட்டார அளவிலான பேச்சுப்போட்டி வல்வில் ஓரி தினவிழாவையொட்டி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். இந்த போட்டியில் குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும்  மாணவி யுவஸ்ரீ முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்தார். இவர் மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில், இதே பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும்  மாணவி ஹரிணி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார். அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவியரிடையே நடந்தது. இதில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் பயிலும் அகிலா என்ற மாணவி மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியர்களை தலைமை ஆசிரியை காந்தரூபி, துணை தலைமை ஆசிரியை சாரதா, பெற்றோர்கள்  உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி