குமாரபாளையம்: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

82பார்த்தது
குமாரபாளையம்: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் 2025-2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் மற்றும் சேர்க்கை கிடைக்கப்பெறாத மாணவர்கள், கல்லூரிக்கு வருகை தந்து, சேர்க்கைக் குழுவை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். இதுவரை இணைய தளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக, TNGASA இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சேர்க்கை தொடர்பான விபரங்கள் www.gasckpm.org என்ற கல்லூரி இணையதளத்தில் உள்ளது.இவ்வாறு கல்லூரி முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி