அரசு பேருந்து அதிகப்படுத்தக்கோரி மனு.

65பார்த்தது
சங்ககிரி To ஈரோடு செல்லும் சாலையில் சிறு சிறு கிராமங்கள் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அந்த சாலையில் ஐந்து S1 அரசு பேருந்துகள் வந்தது. நான்கு பேருந்துகளை நிறுத்தி விட்டனர். தற்போது ஒரு பேருந்து மட்டும் அந்த சாலையில் வருகிறது இதனால் S1 பேருந்து சரியான நேரத்தில் வருவதில்லை
அப்படி வந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை. ஓமலூருலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தும் நிற்பதில்லை. ஓமலூர் பேருந்து அனைத்து கிராமங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராததால் இப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆகையால் தாங்கள் அந்த சாலையில் ஆய்வு செய்து பேருந்தை அனைத்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை பேருந்தில் ஏற்றிச் செல்ல வேண்டும்.
ஆகையால்
பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளை பேருந்து நிறுத்ததில் நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்ல வேண்டி
மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு, அரசு பேருந்து அதிகப்படுத்தக்கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி