நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று இ-நாம் மூலம் மக்காச்சோளம் ஏலம் நடந்தது. இதில் மக்காச்சோளம் குவிண்டால் அதிகபட்சம் ரூ.2,442, குறைந்தபட்சம் ரூ.2,250 விற்பனையானது.
இதில் 110 மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்தனர், இதில் 91 மூட்டை விற்பனையானது. மொத்தம் ரூ.2.19 லட்சம் விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.