குமாரபாளையம் அருகே போலீசார் ரோந்து வாகனம் மீது டூவீலர் மோதியதில் மில் பணியாளர் படுகாயமடைந்தார்.
நாமக்கல் ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருவபவர் ராஜா, 35. இவர் நேற்றுமுன்தினம் இரவு 08: 00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில் ரோந்து வாகனத்தில், ஸ்பிக்ளிங் லைட் போட்டவாறும், சைரன் ஒலி எழுப்பியவாறும் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது வாகனத்தின் பின்னால் மொபைல் போன் பேசியபடி வந்துகொண்டிருந்த ஓலா டூவீலர் ஓட்டுனர், இவரது வாகனத்தில் மோதியதில், டூவீலர் ஓட்டுனர் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணையில், டூவீலர் ஓட்டுனர் பெயர் மனோஜ், 33, என்பதும், ஈரோடு, கணபதிபாளையம் தனியார் மில் பணியாளர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.