நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 70 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6,520 முதல் ரூ.7,499 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ரூ.3,560 முதல் ரூ.4,950 வரையிலும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக 70 மூட்டை பருத்தி ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தார்.