குமாரபாளையத்தில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. அக்னிநட்சத்திரம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்கு ஆளாகினர். அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில், நேற்று மாலை 05:00 மணிக்கு தொடங்கி இரவு 07:00 மணி வரை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழைநீர் ஓடியது. சாலையோர வியாபாரிகள் அவதிக்கு ஆளாகினர்.