நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மற்றும் பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் புரை ஏற்படுதல் உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமின் மூலமாக பயன் பெற்றனர்.