நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் ஊராட்சி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அதிகளவு சாயப்பட்டறைகள் இந்த பகுதியில் இயங்கி வரும் நிலையில், களியனூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் குடிநீர் , சாயம் கலந்து வருவதாக சமூக வலைதளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.