குமாரபாளையம்: புறவழி சாலையில் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி

81பார்த்தது
குமாரபாளையம்: புறவழி சாலையில் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி
குமாரபாளையம் அருகே புறவழிச்சாலையில் நெடுஞ்சாலை பணியாளர்கள் அடைப்பு ஏற்பட்ட வடிகாலை தூய்மைப்படுத்தினர். குமாரபாளையம் வட்டமலை பேருந்து நிறுத்தம் அருகே, சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள வடிகால் பள்ளத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி கிடந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததின் பேரில், நெடுஞ்சாலை பணியாளர்கள், அடைப்பு ஏற்பட்ட வடிகாலை தூய்மைப்படுத்தி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி செய்தனர். இதனால் துர்நாற்றம் நீங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி