பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி ஆட்டோ தொழிற்சங்கம் தீர்மானம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்ட மகாசபை கூட்டமானது பள்ளிபாளையம் ஆவரங்காடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பள்ளி பாளையத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்டோ தொழிலாளர்களை மேம்பாலம் கட்டும் பணிகள் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது.
பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியிலே ஆட்டோ தொழிலாளருக்கு தேவையான ஸ்டாண்ட் அமைத்து தர வேண்டும். மேலும் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.