கார் ஓட்டுநர்களுக்குள் கடும் வாக்குவாதம்

83பார்த்தது
பள்ளிபாளையத்தில் ஏராளமான வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளனர். மேலும் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதிகளில்,  மீட்டர் ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளும் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ரெட் டாக்ஸி எனப்படும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏராளமான வாடகை கார்கள் பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில்,  அத்துமீறி தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மீண்டும்  ஊருக்குள் வந்து   பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறி உள்ளூர் பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள்,  தனியார் கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்ட நிலையில்  அங்கு ஒன்று கூடிய தனியார் கார் ஓட்டுநர்கள் உள்ளூர் வாடகை கார் ஓட்டுநர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளிபாளையம்  போலீசார் அவர்களை காவல் நிலையம் வருமாறு அறிவுறுத்தி சென்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதி அருகே மற்றொரு தனியார் கார் ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றி சென்றதாக கூறி பேருந்து நிறுத்தத்தில் உள்ள மீட்டர் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் தனியார் காரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த  பள்ளிபாளையம் போலீசார்  அங்கிருந்தவர்களை கலைய செய்தனர். இதன் காரணமாக பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி