நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ராஜராஜன் நகர் பகுதியினை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடி போதைக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு குடிபோதையில் சுற்றித் திரிவார். தீவிர அதிமுக தொண்டரான இவர் கட்சிப் பணியில் அதிக அளவில் ஈடுபாடு கொண்டதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் அதிமுக நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் அங்கு சென்று கலந்து கொண்டு வந்ததால் கடன் சுமை ஏற்பட்டது. குடியிருந்த சொந்த வீட்டினை விற்று பெற்றக்கடன் தொகையை செலுத்திய நிலையில் தற்பொழுது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது குடும்பம் உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக நேற்று குடிபோதையில் தான் கட்சிக்காக பாடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றும் இதுவரை கட்சி தன்னை கண்டு கொள்ளவில்லை எனக் கூறி குமாரபாளையத்திலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் திடீரென புரண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்
போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்ற சூழ்நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் சுப்பிரமணியின் நண்பர் அவரை வந்து ஆறுதல் செய்து அழைத்துச் சென்றார்.