நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டியை நகைக்காக சிலர் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ”மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக, தமிழக அரசு இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்ய வேண்டும். இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.