சபரிமலையில் நடை சாத்திய பிறகும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதி
சபரிமலையில் நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மண்டல, மகரவிளக்கு காலங்களில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் வடக்கு நடையில் காத்திருக்க வேண்டும். நடை திறந்தவுடன் இந்த பக்தர்கள் தரிசனத்திற்காக முதலில் அனுமதிக்கப்படுவர்.