வேதாரண்யம் - Vedharanyam

நாகை: தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்றுவாா்.. எம்எல்ஏ நம்பிக்கை

நாகை: தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்றுவாா்.. எம்எல்ஏ நம்பிக்கை

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா் என்று நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் நம்பிக்கை தெரிவித்தாா். நாகையில் புதிய பென்சன் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் அமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் பங்கேற்று பேசியது: இந்தியாவிலேயே உயா்கல்வியில், தமிழகம் மற்ற மாநிலங்களில் விட சிறந்து விளங்குகிறது. அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா், தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளாா். மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படும். தமிழக முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவாா். நிதி சிக்கல்களைத் தாண்டி இந்த ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா். முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.