நாகை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், உலக யோகா தினம் 21. 06. 2024 இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது, பின்பு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினரிடம் பேசுகையில் கடுமையான பணி சூழ்நிலையில் பணிபுரியும் காவலர்கள் ஒவ்வொருவரும் தனது மனநலத்தையும், உடல் நலத்தையும் அக்கறை கொள்வது மிகவும் அவசியமானதாகும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு ஒழுங்காக சேவை செய்ய முடியும், அதைத் தவிர உங்களது குடும்பத்தையும் உங்களால் சரிவர கவனிக்க முடியும் எனவே அனைவரும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியினை தினசரி மேற்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்கள்.