பனங்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

68பார்த்தது
பனங்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சி அமிர்தா நகரில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஓ.என்.ஜி.சி குழும பொது மேலாளர் மாறன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், பொது மேலாளர் மனோஜ்பட்டேல், உதவி பொறியாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் வரவேற்றார். 

இதில் நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக், ஓ.என்.ஜி.சி ஒருங்கிணைப்பாளர் சம்பத், திமுக மகளிர் அணி துணை தலைவர் ஜெயலெட்சுமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தானியங்கி இயந்திரம் சுமார் 2000 லிட்டர் கொள்ளளவுள்ள 1 மணி நேரத்திற்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் உயர்த்தப்பட்டு பன்முறை சுத்திகரிப்பு பில்டர் பொருத்தப்பட்டது. இயந்திரத்தின் பராமரிப்பு செயல்பாடு திறன் இவை அனைத்தும் ஐ.ஓ.டி தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் இந்த ஊராட்சிக்குட்பட்ட 400 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் க

தொடர்புடைய செய்தி