கோவில் உண்டியலை உடைத்து திருடிய சென்ற மர்ம நபர்கள்

61பார்த்தது
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி மெயின் ரோட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊர் பொதுமக்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது. கோயிலில் நிரந்தரமான உண்டியல் ஒன்று அமைக்கப்பட்டு கோவிலின் உள் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி கொண்டுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு வேண்டுதலுக்குச் சென்று பொதுமக்கள் பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திட்டச்சேரி போலீசாரிடம் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களின் கைரேகையை கொண்டு கோவிலில் உண்டியலை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி