நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ராஜாஜி பூங்காவில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர, மாவட்ட
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கமல், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிம்பு முன்னிலையிலும் வேதாரண்யம் நகர மன்ற தலைவரும் நகர
திமுக செயலாளருமான மா. மீ. புகழேந்தி தலைமையிலும் நடைபெற்ற கபடி போட்டியினை நாகை மாவட்ட
திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தொடங்கி வைத்தார்.
செயற்கை ஆடுகளத்தில் நடைபெறும் மா. மீ நினைவு கபடி கோப்பை போட்டியில் தமிழகம், கர்நாடக, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஓன்றிய செயலாளர்கள் உதயம் முருகையன், சதாசிவம் உள்ளிட்ட
திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.