நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பங்கேற்று அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர். மேலும் நெய் விளக்கு தீபமேற்றி வழிபட்டனர்.