மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பள்ளிவாசல்களில் தியாகத் திருநாளாம் புனித பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் அதிகாலை தொழுகையான சுபுஹீத் தொழுகை முதல் பள்ளிவாசல்களுக்கு வர தொடங்கினர். இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் புனித ஹஜ் யாத்திரையின் சிறப்புகளை விளக்கி பக்ரீத் பண்டிகையின் சிறப்பு பிரசங்கம் நடைபெற்றது.