திருமருகலில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

53பார்த்தது
திருமருகலில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனி பிரபு ஆகியோர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெரு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமருகல் மேலத்தெரு பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடைகளுக்கு சீல் வைத்து கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி