வேதாரண்யம் அருகே சங்கடம் தீர்த்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் அருள்மிகு சங்கடம் தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக யாக சாலையிலிருந்து புனித நீர் நிரம்பிய கடத்தை சிவாச்சாரியார்கள் சுமந்து பக்தர்களுடன் யாகசாலை வலம்வந்து திருக்கோயில் சுற்றி வந்து கருட பகவான் வானத்தில் சுற்றி வந்து ஆசீர்வாதம் செய்ய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகத்தை நகர மக்கள் திரண்டு வந்து கும்பாபிஷேகத்தை கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.