வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கோவை. சுப்பிரமணியன், ஏ. வேணு, வடக்கு ஒன்றியச் செயலாளா் ஏ. வெற்றியழகன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் அலெக்சாண்டா், செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.