நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் உத்தரவின்படி, வேதாரணியம் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கணேஷ், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.