நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா துளசியாபட்டினம் கிராமத்தில் ரூ. 18. 95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி ஒளவையருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஆய்வு செய்தார் அப்போது ஒப்பந்ததாரர்களிடம் இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்த அரசு சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில், சேக்கிழார், அவ்வையார் போன்ற சான்றோர் பெருமக்களுக்கும், சித்தர்களுக்கும் புகழ் சேர்க்கின்ற வகையில் விழாக்களை நடத்துவதோடு மணிமண்டபங்களையும் சீரமைத்து பெருமை சேர்க்கின்றது.
தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டம் அமைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, வேதாரண்யம் வட்டம், துளசியாபட்டினத்தில் ரூ. 18. 95 கோடி மதிப்பீட்டில் ஒளவையாருக்கு மணிமண்டபம், தெப்பக்குளம், செயல் அலுவலர் அலுவலகம், அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு போன்றவை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்