மற்றவர்களை குறைசொல்பவர்கள் தாங்கள் நடத்தும் இயக்கத்தை முதலில் பார்க்க வேண்டும் ; பாமகவில் ஏற்பட்ட பிளவுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம் செய்தார்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போ து பாமக பிளவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் ; மற்றவர்களை குறை சொல்லும் பாமக அவர்கள் சார்ந்த அந்த இயக்கத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்த செய்தி இரண்டு நாட்களாக முரசொலி பத்திரிகையில் வந்துள்ளது. அதனை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும். இதுவே என்னுடைய பதில் என்று தெரிவித்தார்