திருமருகல் வட்டாரத்தில்
பருத்தி காப்பீடு செய்ய மார்ச் 31-ந்தேதி கடைசி நாள்
வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
திருமருகல் வட்டாரத்தில்
பருத்தி காப்பீடு செய்ய மார்ச் 31-ந்தேதி கடைசி நாள்
வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி முடிந்து பின் வயலில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யும் பருத்தி பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும், பூச்சி நோய் தாக்கப்பட்டாலும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ. 956 பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரீமிய தொகை செலுத்த வருகிற மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். நடப்பாண்டு மழையால் இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இயலாது. எனவே விண்ணப்பம் மற்றும் முன் மொழிவு படிவம், வங்கி கணக்கு புத்தக முதற்பக்க பிரதி, ஆதார் கார்டு நகல், சிட்டா அடங்கல், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் வழியாக பிரீமியம் செலுத்தி பருத்திக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.