மழையால் பாதிக்கப்பட்ட எள் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் கோரிக்கை

75பார்த்தது
சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டஎள்ளு சாகுபடிக்கு இன்சூரன்ஸ் செய்ய ஆவனம் செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி கிராமத்தில் 60 ஏக்கர் எள் சாகுபடி செய்துள்ள நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் எள் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , ஏக்கருக்கு 20 ஆயிரம் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் மழையினால் முற்றிலும் எள் பயிர்கள் அழிகி விட்ட நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்ய முற்ப்பட்டால் உம்ளச்சேரி கிராமத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது என வேளாண்மை துறையினர் தட்டி கழிப்பதாக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எள்ளுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கான தேதி இன்னும் மூன்றே நாளில் முடிவடைய உள்ளதால் எள் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் இன்சூரன்ஸ் செய்து இழப்பீடு வழங்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி