தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், சி பி எஸ் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நாகப்பட்டினத்தில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால சண்முகம் தலைமை தாங்கினார். மேலும் இந்த பேரணி நிறைவில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.