வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

58பார்த்தது
கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலய வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உள்ள சிறப்புமிக்க திருத்தலமான அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கும், திருக்கொடிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் வருகிற ஒன்பதாம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி