தனது சாகுபடி நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தவரை கண்டித்து குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தரகமருதூரில் மஞ்சுளா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை பக்கத்து வயல்காரர் கதிர் அறுக்கும் இயந்திரத்தை தடுத்ததால் பாதிக்கப்பட்ட மஞ்சுளா குடும்பத்தினர் தனது குடும்பத்தினருடன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உண்ணாவிரதம் இருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.