மாங்காய் விலை சரிவு விவசாயிகள் கவலை

61பார்த்தது
நாகை மாவட்டத்தில் வடக்கு பொய்கை நல்லூர் தொடங்கி வேதாரண்யம் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது நடப்பாண்டு பருவநிலை மாறுபாட்டால் மாங்காய் விளைச்சல் பாதிக்க பட்ட போதிலும் தற்சமயம் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் மாங்காய் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் பல இடங்களில் விலை சரிவால் மாங்காயை பறிக்காமல் மரத்திலேயே விவசாயிகள் விட்டு வைத்துள்ளனர் மாங்காய் சீசன் முடிவடைய உள்ள நிலையில் தற்சமயம் நிலவும் விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி