தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து கோடிக்கரையில் திமுக சார்பில் கூட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரை ஊராட்சியில் உள்ள வி எம் டி பயணியர் விடுதி வளாகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டம் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அஞ்சப்பன் தலைமையில் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி கோடிக்கரை கடற்கரைக்கு செல்லும் சாலையை கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு சாலை என பெயர் பலகை திறப்பதென்றும் , சிறப்பு விழாவாக நடத்துவதென்னம் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், வர்த்தகர் அணி அமைப்பாளர் அனந்தராமன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குமார், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் பீர்முகமது மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.