நாகப்பட்டினம்: முதல்வர் மருந்தகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

64பார்த்தது
நாகப்பட்டினம்: முதல்வர் மருந்தகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரால் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டன. 

அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம், கத்தரிப்புலம் மருதூர் வடக்கு, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், நாகூர் மெயின்ரோடு (சந்திரா கார்டன்), சிக்கல் மற்றும் கீழ்வேளூர் ஆகிய 7 இடங்களில் தொழில் முனைவோர்கள் நடத்தும் மருந்தகங்களும், கூட்டுறவு நிறுவனங்களான நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேதாரண்யம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் புத்தகரம், வேளாங்கண்ணி மற்றும் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 5 இடங்களில் நடத்தும் மருந்தகங்களும் என மொத்தம் 12 மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கி வருகின்றன. 

அதன்படி முதல்வர் மருந்தகமானது வெளிச்சந்தை விலையைக் காட்டிலும் 75% குறைவாகவும், 25% தள்ளுபடியிலும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள் மற்றும் சித்தா ஆயுர்வேதிக் மற்றும் யுனானி மருந்துகள் தரமாகவும் குறைவான விலையிலும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களில் வெளிச்சந்தை மதிப்பைவிட குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயனடைய வேண்டும்.

தொடர்புடைய செய்தி