மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் பகுதியில் உள்ள நீர்நிலைகள் கோடை வெப்பத்தால் வறண்டு புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த நீர்நிலைகளை பருவமழை துவங்குவதற்கு முன்பாக தூர்வாரி நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.