பயிா்க் காப்பீடு: காலஅவகாசம் நவ. 30 வரை நீட்டிப்பு

71பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமா் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின்கீழ், சம்பா/ தாளடி நெற்பயிா் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பா் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் கோரிக்கையின்படியும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் வேண்டுகோளினை ஏற்றும், பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சம்பா/தாளடி நெற்பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை தெரிவித்துள்ளது.

இயற்கை இடா்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில், காப்பீடு செய்ய வழிவகை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் காப்பீடுக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதனைக் கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பொதுசேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலம் தங்கள் விருப்பத்தின் பேரில் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி