நாகப்பட்டினம்: தேர்தல் நடைமுறை மேம்பாடு; ஆட்சியர் அறிவிப்பு

55பார்த்தது
நாகப்பட்டினம்: தேர்தல் நடைமுறை மேம்பாடு; ஆட்சியர் அறிவிப்பு
தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்குள் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் விரைவில் ஆலோசிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, தலைமை தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 30.04.2025-க்குள் தெரிவிக்குமாறு அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்   ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி