வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேதாரண்யம் நகராட்சி பொதுமக்களுக்கு முறையாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்காததை கண்டித்தும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு குடிநீர் வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகளை முறையாக பராமரிக்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் நகராட்சியில் பல்வேறு துறைகளில் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழலை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வேதாரண்யம் நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்