கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது,

73பார்த்தது
கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது,
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (21. 06. 2024) நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், கீழையூர், கீழ்வேளூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, வேதாரணியம், நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 15 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1000 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் பனங்கல் 3 லிட்டர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி