மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது.
காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவர் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரைவீட்டில் நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்தனர். சீர்காழி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. பாகசாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.